தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை

38058பார்த்தது
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை
தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பத்துக்கு மத்தியில் சமீப நாட்களாக ஆங்காங்கே மழை பேய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 11) தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி