கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் அழகேஷ்வரி ஜெயந்திஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உபயதாரர்கள் மூலம் புதிய சூரிய மின்விளக்கு ரூ. 2. 88 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த பணியை குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் , சுந்தரி , கோவில் ஸ்ரீகாரியம் சண்முகம்பிள்ளை , முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் , கவுன்சிலர் ரோகிணி அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.