உத்திரமேரூர் அம்மன் கோயில் பால்குடம்.

79பார்த்தது
உத்திரமேரூர் ஸ்ரீ மாரிமேல்கட்டம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பால்குட விழாவில் 500 ம் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் புடவைகட்டி பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ மாரிமேல்கட்டமன் ஆலயத்தில் இன்று 12ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உத்திரமேரூர் ஸ்ரீமுத்துபிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குடம் ஊர்வலத்தில் 500ம் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் புடவை கட்டி பால் குடம் எடுத்து பஜார் வீதி வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள மாரிமேல்கட்டமன் ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அந்தக் கோவில் பூசாரி சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும், சமபந்தி விருந்தும், மாலையில், சந்தன காப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்பு நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அறுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி