உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி பருவ மழை காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை கொண்டு சாத்தணஞ்சேரி மற்றும் சீட்டணஞ்சேரி கிராமங்களில் உள்ள 280 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
கடந்த 2020 - -21ல், இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ், புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஏரிக்கரை சீரமைத்தல், மதகுகள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. எனினும், ஏரி துார்வாராமல், ஏரிக்கான நீர் வரத்து கால்வாய்களும் சீர் செய்யாமல் விடுபட்டது. சாத்தணஞ்சேரி ஏரிக்கு முக்கிய நீர்வரத்து ஆதாரமாக உள்ள பாலாற்று கால்வாய் பல ஆண்டுகளாக துார்ந்துள்ளது.
இதனால், இந்த ஏரி, 20 ஆண்டுகளுக்கு மேலாக நிரம்பாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.