புல்லம்பாக்கம் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

82பார்த்தது
புல்லம்பாக்கம் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
உத்திரமேரூர் ஒன்றியம், புல்லம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றங்கரையொட்டி கிராமத்திற்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் வழிபாட்டுக்கான உகந்த நாட்களில் கோவில் திறந்து பூஜைகள் நடைபெறும்.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோவிலில் பூஜைகள் முடிந்து, அன்று இரவு 8: 00 மணிக்கு வழக்கம் போல கோவில் கதவு பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அப்பகுதியினர் கண்டனர்.

கோவில் கருவறைக்குள் சென்று பார்த்தபோது, சுவாமி தலை மீது அணிவித்திருந்த கிரீடம் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள், பித்தளையிலான குத்து விளக்குகள், கோவில் மணி மற்றும் காணிக்கை உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, மாகரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி