கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

55பார்த்தது
கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வேறு வழக்கின் விசாரணை காரணமாக வரும் மே  5ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி