அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம், எல். எண்டத்துார், ஊனமலை, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், மான்கள் அதிக அளவில் உள்ளன. அவை, தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக, அடிக்கடி கிராமப் பகுதிகளில் உலா வருகின்றன.
நேற்று, பெரும்பாக்கம்ஏரி பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த, நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் மானை, அப்பகுதியில்சுற்றித் திரிந்த தெருநாய்கள் கடித்துக் குதறின.
இதில் பலத்த காயமடைந்த மான், உயிருக்குப் போராடி, பின் இறந்தது. இதைக்கண்ட அப்பகுதிவாசியினர், அச்சிறுபாக்கம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நாய் கடித்து இறந்த மானின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து, அச்சிறுபாக்கம் வனத்துறை அலுவலக வளாகப் பகுதியில்புதைத்தனர்.