திருப்போரூர்: கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவி உடல்

67பார்த்தது
திருப்போரூர்: கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவி உடல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சூலேரிக்காடு கடற்கரையில், நேற்று மாலை 4 மணியளவில் இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கிய நிலையில் இருந்தது.

கடற்கரையில் ஆண், பெண் இருவரின் காலணிகள், இரண்டு சைக்கிள்கள், இரண்டு கல்லூரி அடையாள அட்டைகள் இருந்தன. அந்த அடையாள அட்டையில் காலவாக்கம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படிக்கும் சுவக் ஷா (19) மற்றும் கார்த்திக் (19) என்ற விபரம் இருந்தது.

இது குறித்த தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரை ஒதுங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் கடல் அலையில் சிக்கியுள்ளாரா என்று மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். கடற்கரை மணலில் எவர் - 2024 என்று எழுதப்பட்டிருந்தது.

டேக்ஸ் :