ஏகனாம்பேட்டை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்

70பார்த்தது
ஏகனாம்பேட்டை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்
வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லாததால், இட நெருக்கடிக்கு மத்தியில் இயங்குவதால் கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.


அதன்படி, ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ், 29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை விழாவில், உத்திரமேரூர் தி. மு. க. , - எம். எல். ஏ. , சுந்தர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 7. 30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டிய சமையலறை கட்டடத்தை திறந்து வைத்தார்.

உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி