திருக்கழுக்குன்றத்தில் 2- மக்களிடையே மோதல் ஏற்படும் அபாயம்

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பாண்டூர் மற்றும் கிளாப்பாக்கம் கிராமம் இக்கிராமத்திற்கு பாண்டூர் பாலாற்று படுகையில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி 5 முறை தடையாகி ஆறாவது முறையாக இன்று துவங்கியது ஆழ்துளை கிணறு அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நீதிமன்றம் கிலாப்பாக்கம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவிட்டது அதன் பேரில் இன்றைய தினம் பாண்டூர் அருகே உள்ள பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து முடிந்தது இருப்பினும் எங்கள் பகுதியில் போர் போடக்க கூடாது என பாண்டூர் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு தோண்டியதை மண்ணால் புதைத்து பாண்டூர் பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் எங்கள் ஊர் வழியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது தொடர்ந்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகளும் ஆழ்துளை கிணறு அமைக்க வந்த பணியாளர்களும் அங்கிருந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி