கரூரில் மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று(நவ.21) அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் தான் கூலி வேலை செய்வதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றும்படியும் அமைச்சரிடம் கூறினார். மேலும், தனது பிள்ளைகளை படிக்க வைக்குமாறும் முதியவர் வேண்டுகோள் விடுத்த நிலையில், அவருக்கு உதவுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.