உத்திரமேரூர் குளத்தங்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

82பார்த்தது
உத்திரமேரூர் குளத்தங்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
உத்தரமேரூர் பேரூராட்சி, 5வது வார்டில் துர்க்கை அம்மன் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் பேரூராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இந்த குளக்கரையின் ஒரு பகுதியில், பேரூராட்சி சார்பில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், குளக்கரையின் மற்ற பகுதிகளில் கால் நடைகளுக்கான கொட்டகை மற்றும் வைக்கோல் போன்றவை குவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர்ஆக்கிரமித்துள்ளனர். எனவே, இக்குளக்கரையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை மற்றும் பூங்கா வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி