சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி?

72பார்த்தது
சுற்றுலா தலமாக மேம்படுமா நின்னக்கரை ஏரி?
மறைமலை நகர் நகராட்சி நடுவே பரந்து விரிந்துள்ள நின்னக்கரை ஏரியை துார் வாரி, சுற்றுலாவுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும் என, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர், நகரின் மையத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நின்னக்கரை ஏரி, 118 பரப்பளவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும், இந்த ஏரி முழுதும் நிரம்புகிறது.

நகரமயமாக்கல் காரணமாக, இந்த பகுதியில் விவசாயம் வழக்கொழிந்ததால், கோடைக்காலங்களிலும் ஏரியில் தண்ணீர் முழுமையாக இருக்கும். கோடைக் காலங்களில் தண்ணீர் இருப்பதால், வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன.

கோடை காலங்களில் அதிக அளவில் இந்த ஏரிக்கு நாரை கொக்கு, நீர்வாத்து உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயத்திற்கு வரும் பறவைகள், நின்னக்கரை, திருக்கச்சூர் ஏரிகளுக்கும் வருகின்றன.

பறவைகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ள இங்கு, போதிய மரங்களோ, மணல் திட்டுகளோ இல்லை. மேலும், ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் தடங்கள் செல்வதும், நாளுக்கு நாள் கழிவுநீர் ஏரியில் கலப்பதும், குப்பை கொட்டப்படுவதும், பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏரிக்கரையை பலப்படுத்தி, சுற்றிலும் மரங்கள் மற்றும் ஏரியின் நடுவே மணல் திட்டுகள் அமைக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி