பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான பூனம் பாண்டேவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுக்க வந்த நபர் அவரை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றார். ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வந்த போது பின்னால் நின்று கொண்டிருந்த நபர், திடீரென முத்தமிட முயன்றதால் நடிகை அதிர்ச்சியடைந்து அங்கிருந்து விலகிச் சென்றார். இதைப் பார்த்த மெய்ப்பாதுகாவலர் அந்த நபரை பிடித்து அப்புறப்படுத்தினார்.