திருப்போரூர் அடுத்த பனங்காட்டுப்பாக்கம், எம். ஜி. ஆர். , நகரில், நேற்று முன்தினம் இரவு 8: 00 மணியளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டு, மூன்று மணி நேரமாக மீண்டும் மின்சாரம் வரவில்லை.
இதனால், கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூர் மின் வாரிய அலுவலகத்திற்கு, அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சென்றனர். அங்கு, சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
தாழம்பூர் போலீசார் சாமாதானம் பேசி தடுத்தனர். அதனால், மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த அதிகாரிகள், முக்கிய இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. சரி செய்து, உடனே மின்சாரம் வழங்கப்படும் என கூறினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.