பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக பிரமுகர் கைது

65பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு பகுதியில் கடந்த டிசம்பரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. இது தொடர்பாக இருவர் மீது 3 பிரிவுகளில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், அமைச்சர் மீது சேறு வீசி தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சேறு வீச தூண்டிய மற்றொரு பெண் நிர்வாகி விஜயதரணி தலைமறைவாக உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி