புதிய ரேஷன் அட்டை வாங்கியவர்கள் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் அட்டை, ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். அங்கு விண்ணப்பிக்கப்படும் மனுவுக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். தொடர்ந்து பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி உடையோருக்கு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் கூடுதல் பயனர்களை இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.