நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் தனியார் பள்ளி ஆசிரியையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் கடை நடத்திவரும் ராஜு ஆசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், அதற்கு ஆசிரியை மறுத்ததால் அவரை காரில் கடத்தியதாகவும் காவல்துறை விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.