ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

85பார்த்தது
காஞ்சி மாநகரின் கிழக்கே சீர்மிகு ஊத்துக்காடு கிராமத்தில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாய் வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை தந்து பக்தர்களின் குறைகளை போக்கி, தனித்தே கோவில் கொண்டு அருளாட்சி செய்து வரும் அருள்மிகு தேவி ஸ்ரீ எல்லம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்கோயில் புணரமைக்கும் பணியினை பக்தர்கள் பெரும் முயற்சியினால் ஆலயம் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டுப்பட்டு பணிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விநாயகர் பூஜையுடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் வெகு விமரிசையாக நாள்தோறும் நடைபெற்று வந்தது.

இன்று கால பூஜை நிறைவு பெற்று பூர்ணாகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேல வாத்தியங்கள் முழங்க கலசங்க புறப்பாடு நடைபெற்று ஆலயத்தை வலம் வந்து உத்திரட்டாதி நட்சத்திரம், சதுர்த்தி திதி, அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10 மணிக்குள் மீன லக்னத்தில் ராஜகோபுரம் மூலவர் கோபுரம் உள்ளிட்ட அனைத்து பரிகார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் காந்தி , இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் , பக்தகோடிகள் அனைவரும் திராளாக வந்து மஹா கும்பாபிஷேக வையவத்தை கண்டுகளித்து தேவி ஸ்ரீ எல்லம்மனின் திருவருட்கடாட்சத்தினை பெற்று சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி