U-19 மகளிர் டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 83 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.