கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு இன்று (பிப்., 02) மாலை அவரது சொந்த ஊரான மேலகாட்டுவிளையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அவர் காவல்துறை மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் இஸ்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவருக்கு வரவேற்பளித்தனர். இதில் இஸ்ரோ அதிகாரிகள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.