பிரேசிலின் சாவோ தோமே தாஸ் லெட்ராஸ் நகரில் சிலந்தி மழை பெய்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த சிலந்திகள் இனச்சேர்க்கை செயலில் ஈடுபட்டதாக உயிரியலாளர் கீரோன் பாசோஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இது போன்று எப்போதாவது நூற்றுக்கணக்கான சிலந்திகள் கூடி இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றன என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான சிலந்திகள் வானத்திலிருந்து தரையில் விழுந்த நிகழ்வு நடந்தது.