மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு காரில் திரும்பிய 5 பேரின் உயிரை பைக் ஸ்டண்ட் பறித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 9 பேருடன் கார் வந்துகொண்டிருந்தபோது சிலர் பைக்கர்கள் ஸ்டண்ட் செய்துகொண்டிருந்ததால், கார் நிலைத்தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.