ECR-ல் கடந்த 25ம் தேதி நள்ளிரவு பெண்கள் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் இருந்த கும்பல் ஒன்று துரத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிடிபட்ட முக்கிய குற்றவாளியான சந்துரு என்பவர் இதுகுறித்து வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சந்தோஷ் என்பவர் சொன்னதன் காரணமாகவே நான் அந்த காரை துரத்தினேன். ஆனால் கார் மாறி போய்விட்டது. நாங்கள் துரத்தியது வேறு கார். டோல் கேட்டில் பணம் வசூலிப்பதை தவிர்க்கவே திமுக கொடி கட்டினோம் என கூறியுள்ளார்.நன்றி: தந்தி