செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொலம்பாக்கம் துணை மின் அலுவலகத்திற்கு தனியார் டிராக்டர் மூலம் 6 - மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு மேல்மருவத்தூர் ரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது டிராக்டரின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிராக்டரின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.