கால்வாய் குறுக்கே சாலை தண்ணீர் செல்ல வழியில்லை

82பார்த்தது
கால்வாய் குறுக்கே சாலை தண்ணீர் செல்ல வழியில்லை
குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் ஊராட்சி 'சிட்கோ' தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகள் உள்ளன.

குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் பகுதியில் 25 அடி அகலத்தில் கால்வாய் செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் ஒரு பகுதி, இந்த கால்வாய் வழியே செல்லும்.


தவிர, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், அதை சுற்றியுள்ள பகுதியின் மழைநீர் வடிகால்வாயாகவும் இந்த கால்வாய் இருக்கிறது. எம். கே. பி. , நகரில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிக்கு செல்ல, இந்த கால்வாயின் குறுக்கே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் போது தண்ணீர் செல்ல போதிய வழி ஏற்படுத்தவில்லை. 25 மீட்டர் அகலமுள்ள கால்வாயில் சுமார் 8 அடி அகலத்திற்கு மட்டும் தண்ணீர் செல்ல வழி உள்ளது.

இதனால், மழை காலத்தில் இந்த வழியே தண்ணீர் விரைந்து செல்ல முடியாமல், தடைப்பட்டு குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்வதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த கால்வாயின் குறுகே தரைப்பாலம் அமைத்து தண்ணீர் செல்ல போதிய வழி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி