சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக சிக்னல் கம்பம்

50பார்த்தது
சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக சிக்னல் கம்பம்
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை வழியாக செவிலிமேடு செல்லும் புறவழி சாலையான, ஓரிக்கை மிலிட்டரி சாலை, 7 கி. மீ. , நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டது.

கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.


இதையொட்டி, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், இடையூறு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.

இதில், ஓரிக்கை நான்கு முனை சந்திப்பு அருகில், போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள சிக்னல் கம்பம் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

இதனால், அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இடையூறாக உள்ள சிக்னல் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி