15வது நாளில் புதுப்பெண் பலி; தாய் புகார்

3270பார்த்தது
15வது நாளில் புதுப்பெண் பலி; தாய் புகார்
பெரம்பூர், ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் மனைவி இந்துஜா, 27. பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவர்களுக்கு திருமணமாக 15 நாட்களே ஆகின்றன. இந்துஜா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரது கணவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், இந்துஜாவின் தாய் ஆனந்தி அளித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். ஆர். டி. ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி