அச்சரப்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

58பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சரப்பாக்கம் மாதா கோயில் பௌர்ணமி விழாவிற்கு பக்தர்கள்
வந்திருந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்.

அச்சரப்பாக்கத்தில் மழை
மலை மாதா ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி சித்ரா பௌர்ணமியான இன்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பேருந்து நிலையத்திலிருந்து ஆலயம் வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மாதா கோயில் வரும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த தனியார் கிறிஸ்தவ ஆலயத்தின் சார்பில் இருசக்கர வாகனம் கார் வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை எலப்பாக்கம் கூட்டு சாலையின் முன்பே நிறுத்தவதற்கான பணியாளர்களை நியமித்து நடவடிக்கை எடுப்பதில்லை.
அச்சரப்பாக்கம் பேரூராட்சியை கடந்து பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு செல்லும் போது பள்ளிப்பட்டு ஊராட்சி மன்றத்தின் சார்பில் வாகனங்கள் நுழையு கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்படுகின்றன.
இதனால் கூட்ரோடு பகுதியில் இருந்து மாதா கோயில் இருக்கும் கலைஞர் நகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி