கஞ்சா விற்பனைகள் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 கைது

65பார்த்தது
சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கஞ்சா என்ற போதை பொருளை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், கஞ்சா வெப்பணியை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


காவல்துறையினர் தனிப்படை அமைத்து, அவ்வப்பொழுது கஞ்சாவை கைப்பற்றி விற்பனையை தடுத்து வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்பவரை தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். இன்று கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சிலர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


அப்பொழுது கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இருவரை விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கொர்ரா பீமேஸ்வர் ராவ், மற்றும் பெத்துராஜ் ரமணா என்பது தெரியவந்தது. இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி