செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதி மையப்பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்கிவந்தது. செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் செய்யூர் மருத்துவமனைக்கு போதிய கட்டிடம் வசதி இல்லை எனவும் பழுதடைந்த கட்டிடங்களில் மருத்துவமனை செயல்படுவதாகவும் தனித்தனி கட்டிடங்களில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிப்பு, மருந்து வழங்கும் இடம், நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டு ஆகிய கட்டிடங்கள் தனித்தனி கட்டிடங்களில் செயல்படுவதாகவும் ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து இந்த செய்யூர் அரசினர் மருத்துவமனைக்கு 3.20 கோடி ரூபாய் சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் காரணமாக செய்யூர் எம்எல்ஏ மு. பாபு செய்யூர் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டவுள்ள இடத்தினை ஆய்வு செய்து அங்கு உள்ள பாழடைந்த பயன்படுத்த முடியாத கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.