பள்ளிகள் இன்று திறப்பு ஊழியர்கள் பராமரிப்பு

55பார்த்தது
பள்ளிகள் இன்று திறப்பு ஊழியர்கள் பராமரிப்பு
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பொதுத் தேர்வுகள், லோக்சபா தேர்தலை முன்னிட்டு முன்னதாக நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த ஏப். , 24ம் தேதி முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஏப். , 19ம் தேதி பள்ளிகள் ஓட்டுச்சாவடியாக செயல்பட்டன. இன்றுடன் விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுவதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் பள்ளிகளை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு மேல்நிலை, உயர்நிலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, துவக்கப் பள்ளிகளில், அந்தந்த பகுதி உள்ளாட்சி ஊழியர்கள், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து வகுப்பறை, வளாகங்களில் குப்பை அகற்றி, குளோரின் பவுடர் துாவப்பட்டது. குடிநீர் தொட்டிகளை கழுவி, குழாய்கள் பராமரிக்கப்பட்டது. மேலும், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது.

மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலை உள்ளிட்ட பள்ளிகளில், சுகாதார ஆய்வாளர் ரகுபதி தலைமையில் பணிகள் நடைபெற்றன.

டேக்ஸ் :