செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வீரா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் பதவி வகித்து வந்தார் இந்நிலையில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைவர் மற்றும் துணை தலைவர்களின் செக் பவர் பறிக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே கணக்கு வழக்குகளை கவனித்து வந்தார் இந்நிலையில் தான் எந்த ஊழலும், முறைகேடுகளும் செய்யவில்லை என வீரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கு நிலுவையில் இருக்க மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா திமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய் துவங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை பதவியில் இருந்து விளக்க வேண்டும் என திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் மற்றும் மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாம்பாக்கம் கிராம பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் இன்று திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மேலும் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராவை பதவி நீக்கம் செய்தால் பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.