செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய கிராம, நகர, பேரூர் கமிட்டிகள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கருங்குழில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் நெடுஞ்செழியன், காஞ்சிபுரம் பாராளுமன்ற பொறுப்பாளர் ஜேம்ஸ், துணைத் தலைவர் சதாசிவலிங்கம், பொதுச் செயலாளர் அருணாச்சலம், செயலாளர்கள் தியாகு, தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு கிராமம் மற்றும் நகர, பேரூர் பகுதிகளில் காங்கிரஸ் உறுப்பினர்களை நியமிப்பது, கிராமப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வளர்ப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் சத்தியசீலன், முகமது ஜாவித் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், நகர, பேரூர் வட்டார தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.