மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி பகுதியில், அரசு மருத்துமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை இயங்குகின்றன. திருக்கழுக்குன்றம் சாலையில் இருந்து உட்புற சாலையில் அமைந்துள்ளன. அப்பகுதி வாசிகள் மற்றும் சிகிச்சைக்காக வருவோர், இரவு நேரங்களில் இச்சாலை வழியாக மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை சாலையில், நீண்டகாலமாக தெருவிளக்குகள் இன்றி, இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், அப்பகுதி வாசிகள் அச்சத்துடனேயே சென்று வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது எல். இ. டி. , தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.