கற்கால கை கோடாரி கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருபவர் வினோத் என்கிற மாணவர் பாலாற்றில் விளையாடச் சென்றுள்ளார். அப்பொழுது இப்பழமையான கல் ஆயுதத்தை கண்டுள்ளார்.

இது குறித்து மாணவர் கூறுகையில் இதுபோன்ற கற்கால கருவிகளை எங்கள் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு நடவத்தை சேர்ந்தவர்கள் தொல்லியல் கண்காட்சி நடத்தினார். அப்போது இதுபோன்ற கற்கால கருவிகளை பார்த்தோம். மேலும் இதுபோன்ற கற்கால கருவிகள் குறித்து பழமையான சின்னங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இந்த கல்லும் கண்காட்சியில் கண்ட கல்லை போன்றே இருந்ததால் இதை நான் எடுத்தேன் என்று கூறினார்

இதையடுத்து இந்த கல் பழமை வாய்ந்த கற்கால கை கோடாரி என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி