படாளம் அருகே சாலை பராமரிப்பு பணி காரணமாக
முன்னாள் சென்ற வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து
விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 25 பயணிகளுடன் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த அத்திமனம் என்ற இடத்தில் அரசு பேருந்து
சென்று கொண்டு இருந்த பொழுது
சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருவதன் காரணமாக அரசு பேருந்துக்கு முன்னால் சென்ற வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்த பொழுது
பின்னால் வந்த அரசு பேருந்து வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார் அரசு பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த போக்குவரத்து நெரிசல் படாளம் போலீசார் நெரிசலை சீர் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எனது மேற்கொண்டு வருகின்றனர்.
படாளம் அருகே இன்று ஒரே நாளில் இரண்டு அரசு பேருந்துகள் வெவ்வேறு இடத்தில் விபத்துக்குள்ளானது
குறிப்பிட தக்கதாகும்.