செங்கல்பட்டு மாவட்டம் ஒழுபாக்கம் என்ற இடத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையில் சாலை ஓரத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக திண்டிவனம் நோக்கி சென்ற கார் ஒன்று லாரி மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், அடுத்தடுத்து பின்னால் வந்த நான்கு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.