தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அருகே வடபட்டினம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வீட்டுமனைப் பட்டா மற்றும் சொந்த வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.

இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு,

தலா 4. 37 லட்ச ரூபாய் என மொத்தம் 91 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகட்ட வடப்பட்டினம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கி, கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது.



இதையடுத்து கடந்த ஜன. , மாதம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது,
வீடுகள் தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தரமற்ற முறையில் வீடு கட்டப்பட்டதால் பக்கவாட்டுச் சுவர்கள் கைவைத்தலே ஆடும் நிலையில் இருந்தது,

இந்நிலையில் தற்போது வரை எந்த வித நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக இன்று லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடந்தது,

தொடர்புடைய செய்தி