ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலை மற்றும் கூடுவாஞ்சேரி, அருள் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசி கார்த்திக் என்பவர் கூறியதாவது:
ஊரப்பாக்கம் பிரியா நகர் பிரதான சாலையிலும், கூடுவாஞ்சேரி அருள் நகர் பகுதியிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நாட்களாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடையால் சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.