எஸ். ஆர். எம் கல்லூரியில் வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே அமைந்துள்ள எஸ். ஆர். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
வணிகவியல் துறை மற்றும் மேலாண்மை ஆய்வுகள் துறை சார்பில் வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் வெகு விமர்சையாக நடைபெற்றது
எஸ். ஆர். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த கணக்கியல் நிதி மற்றும் தணிக்கை ஆய்வுகள் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பத்ரியா நசீர் அல் ஷாமாக்கி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்றம் குறித்த தகவல்களை மாணவ மாணவியர்கள் முன் எடுத்துரைத்தார்
இந்த மாபெரும் கருத்தரங்க மாநாட்டில் எஸ் ஆர். எம் குழுமத்தின் டைரக்டர் டாக்டர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்
மேலும் கல்லூரியின் துணை முதல்வர் மதியழகன், துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.