காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

59பார்த்தது
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 19ஆம்தேதி நடைபெறவுள்ள
நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பது மிக முக்கியம். தங்களின் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் சுந்திரமாக செய்யவேண்டும் என்பதை உணர்த்தும்
விதமான விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும் விதமாக செங்கல்பட்டு தாலுகா காவல்துறை சார்பில்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட 72கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல்படை, தமிழக காவல்படை, ஆயுதப்படை, மத்திய சிறப்பு காவல்படை, மற்றும் செங்கல்பட்டு நகர, தாலுகா, படாளம் மற்றும் அனைத்து மகளிர் காவல்துறையினர் என 500க்கும் மேற்ப்பட்டோர் செங்கல்பட்டு வல்லம் ரயில்வே மேம்பாளம் அருகில் இருந்து பேரணியாக துவங்கி வல்லம், ஆலப்பாக்கம், பாரதபுரம் வழியாக மேலமையூர் கிராமம் வந்தடைந்தத இந்த விழிப்புணர்வு பேரணியில் செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் புகழ், நகர காவல் ஆய்வாளர் ஹரிஹரன், படாளம்
காவல் ஆய்வாளர் சத்யபாமா,
போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராம
மூர்த்தி, மற்றும்
உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் ஆய்வாளர்கள், ஆண் மற்றும் பெண் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி