காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

59பார்த்தது
திமுக அரசு செய்த சாதனைகளை கூறி காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் உள்ள தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருஉருவ சிலைக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தண்டரை புதுச்சேரி, தண்டரப்பேட்டை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பு அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு பெண்கள் மலர் தூவியும், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோழியாளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், திமுக நிர்வாகிகள் பத்மா, சிவப்பழனி, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி