அழகுசாதன கிரீம்களினால் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை

51பார்த்தது
அழகுசாதன கிரீம்களினால் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகளவிலான அழகுசாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். சன் கிரீம், ஸ்கின் கிரீம் போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகளவில் சருமத்திற்கான கிரீம்களை பயன்படுத்துவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கிரீம்களில் அதிகளவிலான மெர்குரி(பாதரசம்) இருப்பதனால் அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் Membranous Nephropathy என்கிற நோய் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி