"17. 4 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்'தீவிரம்!

50பார்த்தது
"17. 4 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்'தீவிரம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள 17. 4 லட்சம் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணியை நேற்று கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். முதியோர் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதியில் வாக்காளர்கள் பயன்படுத்தக்கூடிய, 1, 932 ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கனவே, தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், மண்டல அலுவலர்கள் மூலமாகவும் ஓட்டுச்சாவடியின் வசதிகள், பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் உள்ள 178 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்தப்பட உள்ளன.

அதேபோல, மாடர்ன் ஓட்டுச்சாவடி மற்றும் மகளிர் ஓட்டுச்சாவடி ஆகியவை அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதற்கான ஓட்டுச்சாவடி பற்றியும், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி