காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் - தண்ணீர் தேங்குவதில் சிக்கல்

80பார்த்தது
காட்டுபன்றிகளால் வரப்பு நாசம் - தண்ணீர் தேங்குவதில் சிக்கல்
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 12, 000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இதில், வாலாஜாபாத் வட்டாரம் கொட்டவாக்கம், புதுப்பாக்கம், கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளன. அதேபோல, காஞ்சிபுரம் வட்டாரம் கூரம், ஒழுக்கோல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக, வயல்வெளியில் இருக்கும் நெற்கதிர்களை நாசப்படுத்தி விட்டு செல்கிறது.

இதனால், நெல் அறுவடை மகசூல் குறையும் அபாயம் உள்ளது. மேலும், வயல் வரப்புகளை சேதப்படுத்துவதால், வயலில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப்பன்றிகளின் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி