இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

60பார்த்தது
இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்பக்கம் உள்ள ரெட்டிப்பேட்டை தெரு, தும்பவனம் அருணாசலம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில், கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

இந்நிலையில், இரு நாட்களாக கோழி இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீர் சிவப்பு நிறத்தில் சாலையில் வழிந்தோடியதால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீரில் நடந்து சென்று பழகிய மக்கள், இறைச்சி ரத்தம் கலந்த கழிவுநீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்கக்கோரி, மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் சாலை மறியல் செய்து, போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைபட்டு கிடந்தோம்.

இருப்பினும் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தவில்லை. இதேநிலை நீடித்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.

எனவே, ரெட்டிப்பேட்டை தெரு, தும்பவனம் அருணாசலம் தெருவில் உள்ள அனைத்து 'மேன்ஹோல்'களிலும், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி