செங்கல்பட்டு: திருக்கோயிலில் தாமாக உயிருடன் வந்த அதிசய சங்கு

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த விளாகம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சத்தத்தில் தானாகவே உயிருடன் சங்கு திருக்கோயிலுக்கு வந்தது. அதிசயமாக பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அதை எடுத்து கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். 

உப்பு நீரில் மட்டுமே சங்கு இருக்கும் என்பது வழக்கம். ஆனால் திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும். அவ்வாறு பிறக்கும் சங்கினை தாழக் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவர். அதனை வெளிமாநிலத்தவர் உட்பட பலர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். 

சங்கு உயிருடன் தாமாக கோயிலுக்கு வந்ததை சிவன் அருளாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதே போன்று கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி