ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் ராட்டின கிணறு அருகே ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட இணைந்து மதிமுக கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன், மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் ஆகிய தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மல்லிகா தயாளன், மாநில மகளிர் அணி செயலாளர் கலந்துகொண்டு அதிக ஜிஎஸ்டி வருவாய் பெற்றுக்கொண்டு ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்த பாஜக அரசு மற்றும் தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி 37 கோடி கோரிக்கை அலட்சியப்படுத்திய மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மதிமுக தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.