முன்னாள் அமைச்சர் வளர்மதி தேர்தல் பிரச்சாரம்

58பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம், நென்மேலி, சோகண்டி, திருமணி, ஒத்திவாக்கம், மணப்பாக்கம், பொன்விளைந்த களத்தூர், ஆனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா வளர்மதி கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராஜசேகர் வெற்றி பெற்றால் சுற்றுப்புற பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவார் என்றார். தொடர்ந்து பேசிய வேட்பாளர் ராஜசேகர் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரித்தார், வாக்கு சேகரிப்பின் போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சல் குரு ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி உமாபதிஉள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர் வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் ராஜசேகருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி